20 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு: பஞ்சாப் -ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் தேரா சச்சா சௌதா தலைவர் மேல்முறையீடு

பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து, பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் தேரா சச்சா சௌதா
20 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு: பஞ்சாப் -ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் தேரா சச்சா சௌதா தலைவர் மேல்முறையீடு

பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து, பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் மேல்முறையீடு செய்துள்ளார்.
பாலியல் பலாத்கார வழக்கில், தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத்துக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றம் கடந்த மாதம் 28ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, குர்மீத் கைது செய்யப்பட்டு, ரோத்தக் மாவட்டம் சுனாரியாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் குர்மீத் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து குர்மீத்தின் வழக்குரைஞர் விஷால் கார்க் நர்வானா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். சம்பவம் நடைபெற்று பெண்களிடம் (பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள்) 6 ஆண்டுகள் காலதாமதமாக சிபிஐ வாக்குமூலத்தை பதிவு செய்ததை மேல்முறையீட்டு மனுவில் ஒரு காரணமாக சுட்டிக்காட்டியுள்ளோம்.
சிபிஐ தரப்பில் அந்தப் பெண்கள் 1999-ஆம் ஆண்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், 2005ஆம் ஆண்டில் அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் வாக்குமூலத்தில் இருக்கும் சில பகுதிகளை சிபிஐ மூடி மறைத்து விட்டது. இதையும் மேல்முறையீட்டு மனுவில் சுட்டிக்காட்டியுள்ளோம் என்றார் நர்வானா.
பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மர்மக் கடிதம் ஒன்று வந்தது. அந்தக் கடிதத்தில், தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்கால் தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக 2 பெண் துறவிகள் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தும்படி சிர்ஸா மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிபதிக்கு, உயர் நீதிமன்றம் மே மாதம் உத்தரவிட்டது. பிறகு, 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ வசம் உயர் நீதிமன்றம் ஒப்படைத்தது. இதனையடுத்து, குர்மீத்துக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்கை சிபிஐ அமைப்பு டிசம்பர் மாதம் பதிவு செய்தது. இந்த வழக்கில், பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த தீர்ப்பில், குர்மீத்தை குற்றவாளி என்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் தேரா சச்சா சௌதா அமைப்பினர் கலவரத்தில் குதித்தனர். 
இதில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com