பொருளாதாரச் சவால்களை சமாளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

நிதியாண்டின் கடந்த காலாண்டில் நமது பொருளாதாரத்தில் சிறிய அளவுக்கே சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், பொருளாதாரச் சவால்களை சந்திக்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மத்திய நிதியமைச்சர்
பொருளாதாரச் சவால்களை சமாளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

நிதியாண்டின் கடந்த காலாண்டில் நமது பொருளாதாரத்தில் சிறிய அளவுக்கே சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், பொருளாதாரச் சவால்களை சந்திக்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நமது பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறும் விமர்சனம் தவறானது. மாறாக, நாட்டின் பொருளாதாரம் நன்றாக உள்ளது.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் பொருளாதாரம் முன்னெப்போதைக் காட்டிலும் நன்றாக இருப்பதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. நிதியாண்டின் கடந்த காலாண்டில் மட்டுமே மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) சிறிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது.
பொருளாதாரம் சந்திக்கும் சவால்களை சமாளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கருப்புப் பணத்துக்கும் ஊழலுக்கும் எதிராக ஒரே ஒரு நடவடிக்கையைக் கூட எடுக்கவில்லை. அந்தக் கூட்டணியின் செயல்திட்டத்தில் ஊழல் ஒழிப்பு, கருப்புப் பண ஒழிப்பு ஆகியவை எப்போதுமே இருந்ததில்லை.
எனவே, கருப்புப் பணத்துக்கும் ஊழலுக்கும் எதிரான நடவடிக்கைகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள எந்தத் தலைவரும் ஆதரிக்க மாட்டார் என்பது வெளிப்படை.
ஊழல் மற்றும் கருப்புப் பண ஒழிப்பு நோக்கில் மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த மூன்றரை ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் (எதிர்க்கட்சியினர்) தற்போது அசௌகர்யமாக உணர்கின்றனர்.
நிதியாண்டின் கடந்த காலாண்டில் பொருளாதாரத்தில் சற்று சரிவு ஏற்பட்டபோதிலும் சேவைத் துறையானது ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் முன்னேற்றத்தைக் கண்டது.
உற்பத்தித் துறைதான் ஜிடிபி-யை சரிவடையச் செய்தது. தனியார் துறை முதலீடுகள் சரிந்ததுதான் பொருளாதாரச் சுணக்கத்துக்கு காரணமாகும் என்றார் ஜேட்லி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com