ஷீரடி விமான நிலையம் குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்?

மகாராஷ்டிர மாநிலம், ஷீரடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விமான நிலையத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி திறந்து வைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
ஷீரடி விமான நிலையம் குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்?

மகாராஷ்டிர மாநிலம், ஷீரடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விமான நிலையத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி திறந்து வைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக அவருக்கு முறையான அழைப்பை மகாராஷ்டிர விமான நிலைய மேம்பாட்டு நிறுவனம் (எம்ஏடிசி) விடுத்துள்ளது.
இந்தியாவின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு நாளொன்றுக்கு சுமார் 60,000 பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிக பக்தர்கள் வரும் தலமாக இருந்தாலும் இதுவரை அப்பகுதிக்கு விமான சேவைகள் எதுவும் இல்லை. இதன் காரணமாக, புணே அல்லது மும்பை வரை விமானத்தில் பயணித்து, அதன் பிறகு தரைவழி மார்க்கமாக ஷீரடி வரும் நிலை இருந்து வருகிறது.
இந்த சூழலில், அங்கு புதிதாக விமான நிலையம் அமைக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளை எம்ஏடிசி மேற்கொண்டு வந்தது. சுமார் 2,750 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.300 கோடி செலவில் அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது பயன்பாட்டுக்குத் தயாராகியுள்ளது.
கடந்த சில நாள்களாக சோதனை ஓட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விமான நிலையத்தை திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அன்றைய தினம் விமான நிலையத்தை ராம்நாத் கோவிந்த் நேரிலோ அல்லது காணொலி முறை மூலமாகவே திறந்து வைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com