அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது கவலையளிக்கிறது: ராம்நாத் கோவிந்த்

அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது கவலையளிக்கிறது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
பாலில் கலப்படம் செய்துள்ளதைக் கண்டறிவதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) கண்டுபிடித்துள்ள கருவியை, தில்லியில்  அறிமுகப்படுத்தியகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
பாலில் கலப்படம் செய்துள்ளதைக் கண்டறிவதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) கண்டுபிடித்துள்ள கருவியை, தில்லியில்  அறிமுகப்படுத்தியகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது கவலையளிக்கிறது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) 75 ஆவது ஆண்டு விழா தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற பல்வேறு அறிவியல் ஆய்வாளர்களின் சாதனைகளைப் பாராட்டி அவர்களுக்கு ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். 
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இந்தியாவில் உள்ள அறிவியல் ஆய்வாளர்களில் பெண்களின் எண்ணிக்கை 2 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. ஐஐடி-யில் 10 சதவீதம் அளவுக்கு மட்டுமே பெண்கள் கல்வி பயிலுகின்றனர். அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது கவலையளிக்கிறது. 
இந்த பாலினப் பாகுபாட்டுடன் நாம் எவ்வித சாதனையைப் படைத்தாலும் அது முழுமையானதாக இருக்காது.
பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கும் போதுதான் வளர்ச்சி குறித்த நாட்டின் இலக்குகள் முழுமையடையும். பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது இப்போது வரை தீர்க்கப்படாத பிரச்னையாகவே உள்ளது.
இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகளில் 3 முதல் 4 சதவீதம் பேர் மட்டுமே, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கவுன்சிலில் உள்ளனர். எனினும், இந்திய அறிவியல் துறையில் அவர்களின் பங்களிப்பு 10 சதவீதம் அளவுக்கு உள்ளது. தேச வளர்ச்சியில் இந்த ஆய்வு மையத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஸ்டார்ட் அப் இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம், டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா, பொலிவுறு நகரங்கள் அமைக்கும் திட்டம் உள்ளிட்டவை அறிவியல் அறிஞர்களின் பங்களிப்பு இல்லாமல் முழுமை பெறாது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com