ஆகஸ்டில் ரூ.90,669 கோடி ஜிஎஸ்டி வசூல்

நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது மாதமான ஆகஸ்ட் மாதம், ரூ.90,669 கோடி வரி வசூல் ஆகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆகஸ்டில் ரூ.90,669 கோடி ஜிஎஸ்டி வசூல்

நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது மாதமான ஆகஸ்ட் மாதம், ரூ.90,669 கோடி வரி வசூல் ஆகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி, அனைத்து பிரிவுகளுக்கும் சேர்த்து திங்கள்கிழமை (செப். 25) நிலவரப்படி ரூ.90,669 கோடி வசூல் ஆகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி-யாக ரூ.14,402 கோடியும், மாநில ஜிஎஸ்டி-யாக ரூ.21,067 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யாக ரூ.47,377 கோடியும் வசூலாகியுள்ளது. ஆடம்பரப் பொருள்களுக்கான கூடுதல் வரியாக ரூ.7,823 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரியை இந்த மாதம் 20-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், கடந்த ஜூலை மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரியை இன்னும் ஏராளமானோர் செலுத்தாமல் உள்ளனர் என்று அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி அறிமுகமான ஜூலை மாதம், ரூ.94,063 கோடி வரி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மொத்த வரி செலுத்துவோரில் 64.42 சதவீதத்தினரிடமிருந்து ரூ.92,283 கோடி மட்டுமே வரி வசூல் ஆனது குறிப்பிடத்தக்கதது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com