சுஷ்மாவின் ஐ.நா. உரை ஆணவமிக்கது: சீன அரசுப் பத்திரிகை விமர்சனம்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஐ.நா. பொது சபையில் பாகிஸ்தானை விமர்சித்து ஆற்றிய உரையில் ஆணவம் மிகுந்திருப்பதாக சீன அரசுப் பத்திரிகை விமர்சித்துள்ளது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஐ.நா. பொது சபையில் பாகிஸ்தானை விமர்சித்து ஆற்றிய உரையில் ஆணவம் மிகுந்திருப்பதாக சீன அரசுப் பத்திரிகை விமர்சித்துள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தானில் பயங்கரவாதம் பரவியிருப்பதை சீனா ஒப்புக் கொண்டுள்ளது.
சில நாள்களுக்கு முன்பு ஐ.நா.வில் பேசிய சுஷ்மா, 'இந்தியாவும், பாகிஸ்தானும் சில மணி நேர இடைவேளையில்தான் சுதந்திரம் பெற்றன. இந்தியா கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வேகமாக வளர்ந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகின் முன்னணி நாடாக விளங்குகிறது. நாங்கள் மருத்துவர்களையும், பொறியாளர்களையும் உருவாக்கியுள்ளோம். ஆனால், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக உருவாகியுள்ளது. பயங்கரவாதிகளை மட்டுமே உருவாக்கியுள்ளது' என்று பேசினார்.
இது பாகிஸ்தானிடம் நட்பு பாரட்டி வரும் சீனாவுக்கு அதிருப்தியை ஏற்பட்டுத்தியுள்ளது. சீன அரசுப் பத்திரிகையில் சுஷ்மாவின் பேச்சைக் கண்டித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. 'இந்தியாவின் தவறான போக்கு, அதன் இலக்குகளுக்கு சாதகமாக இல்லை' என்ற தலைப்பிலான அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தானில் பயங்கரவாதம் இருப்பது உண்மைதான். ஆனால், பயங்கரவாதிகளை ஆதரிப்பதை பாகிஸ்தான் தேசியக் கொள்கையாக வைத்துள்ளது என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?
பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து பாகிஸ்தானுக்கு என்ன கிடைக்கப்போகிறது. பணம் கிடைக்கப் போகிறதா? அல்லது மரியாதை கிடைக்கப்போகிறதா?
சமீபகாலமாக பாகிஸ்தானின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. பல்வேறு நாடுகளுடன் உறவு மேம்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்தியா ஆணவப்போக்குடன், பாகிஸ்தான் மட்டம்தட்ட நினைக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் நெருங்கிய நட்பையும், ஆதரவையும் பெற நினைக்கும் இந்தியா, அண்டை நாடுகளைக் கண்டு அச்சமடைந்துள்ளது.
சீனாவுடன் நட்புடன்இருப்பதன் மூலமும், பாகிஸ்தானை மதிப்பதன் மூலம்தான் இந்தியா அண்டை நாடுகளுடான பிரச்னையைத் சுமுகமாகத் தீர்க்க முடியும்.
சீனா ராஜிய ரீதியில் பிற நாடுகளுடன் நட்புறவுடன் இருப்பதை இந்தியா தங்கள் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறது. பாகிஸ்தானுடன் சீனா நட்புடன் இருப்பது தங்கள் நலனுக்கு எதிரானது என்று இந்தியா நினைக்கிறது. டோக்காலாமில் சாலை அமைத்தால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று யோசிக்கிறது என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com