ஜிஜேஎம் போராட்டத்தை வாபஸ் பெற ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தைப் பிரித்து கோர்க்காலாந்து என்ற தனிமாநிலத்தை உருவாக்க வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுமாறு கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்)

மேற்கு வங்கத்தைப் பிரித்து கோர்க்காலாந்து என்ற தனிமாநிலத்தை உருவாக்க வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுமாறு கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) கட்சிக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜநாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேற்கு வங்கத்தின் டார்ஜீலிங் மலைப் பகுதியில் நடைபெற்றும் வரும் இந்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை 104-ஆவது நாளை எட்டியது. 
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜனநாயகத்தில் அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தைதான் ஒரே தீர்வாகும். கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதன் மூலமும், சட்ட வரம்புக்கு உட்பட்டு பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமும் தீர்வுகளைக் காண முடியும்.
டார்ஜீலிங் பகுதியில் முழு அடைப்புப் போராட்டத்தை வாபஸ் பெறுமாறும் அப்பகுதியில் இயல்புநிலை திரும்புவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்த உதவுமாறும் ஜிஜேஎம் கட்சியையும், அதன் தலைவர் பிமல் குருங்கையும் கேட்டுக் கொள்கிறேன்.
போராட்டம் காரணமாக, இதுவரை 11 பேர் உயிரிழந்து விட்டனர். 7 பேர் காயமடைந்தனர். டார்ஜீலிங் பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் நடைபெறும் சம்பவங்களைக் கண்டு நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன்.
இந்த விவகாரம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளையும் தீர்ப்பதற்காக இன்னும் 15 தினங்களுக்குள் அதிகாரிகள் நிலையிலான கூட்டத்தைக் கூட்டுமாறு உள்துறைச் செயலாளர் ராஜீவ் கௌபாவைக் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று ராஜ்நாத் சிங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முழு அடைப்பு போராட்டத்தை கைவிடுவதாக ஜிஜேஎம் கட்சியின் அதிருப்தி தலைவரான பினய் தமாங் அறிவித்தபோதிலும், கடந்த ஜூன் 12ஆம் தேதி முதல் இப்போராட்டம் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com