"புளூ வேல்' விளையாட்டு: பள்ளிகளுக்கு ம.பி. கல்வி வாரியம் எச்சரிக்கை

சிறார்களைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும் "புளூ வேல்' ஆன்லைன் விளையாட்டு விவகாரத்தில் மாணவர்களைக் கண்காணிக்குமாறு பள்ளிகளுக்கு மத்தியப் பிரதேச கல்வி வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அந்த வாரியத்தின் கீழ் இயங்கிவரும் ராஜ்ய சிக்ஷா கேந்திரா என்ற தன்னாட்சி அமைப்பு அந்த மாநில தொடக்க மற்றும் இடைநிலைப்  பள்ளிகளுக்கு திங்கள்கிழமை அனுப்பிவைத்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
குற்றம் செய்யும் குணம் கொண்ட சிலரால் "புளூ வேல்' விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த விளையாட்டை விளையாடும் சிறார்கள் முடிவில் தற்கொலை செய்துகொள்ள தூண்டப்படுகிறார்கள். பள்ளிகளில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி மாணவர்கள் செல்லிடப்பேசியைக் கொண்டு வந்து புளூ வேல் விளையாடினால், அதன் இணைய இணைப்பை ஆசிரியர்கள் நீக்க வேண்டும்.

பெற்றோர்கள் உடனான சந்திப்பின்போது அவர்களிடம் தங்கள் குழந்தையை "புளூ வேல்' விளையாடாமல் கண்காணிக்குமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com