மத்திய அரசுப் பணி மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 65-ஆக உயர்வு! 

மத்திய அரசின் பல்வேறு சுகாதார சேவைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதினை 65-ஆக உயர்ததுவது என்று மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது 
மத்திய அரசுப் பணி மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 65-ஆக உயர்வு! 

புதுதில்லி: மத்திய அரசின் பல்வேறு சுகாதார சேவைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதினை 65-ஆக உயர்ததுவது என்று மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது 

தில்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கபட்ட முடிவுகள் குறித்து மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் பல்வேறு சுகாதார சேவைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதினை தற்பொழுது உள்ள 62-இல் இருந்து 65-ஆக உயர்த்துவது என்று மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது 

இந்த உத்தரவானது முன்தேதியிட்டு 31.05.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும். இதன் காரணமாக மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணிபுரியும் 1,455 மருத்துவர்கள் பயன்பெறுவார்கள்.

நோயாளிகளுக்கு சிகிச்சையின் தரம் உயர்த்துதலை நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் பிரசாத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com