ஜிஎஸ்டிக்கு வர்த்தகர்கள் ஆதரவு

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறைக்கு வர்த்தகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஜிஎஸ்டிக்கு வர்த்தகர்கள் ஆதரவு

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறைக்கு வர்த்தகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலர்களுடன் மாதந்தோறும் பிரதமர் நரேந்திர மோடி விடியோ கான்ஃபரன்சிங் முறையில் உரையாற்றி வருகிறார். இந்த மாத நிகழ்வு தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இது 22-ஆவது சந்திப்பாகும். அப்போது, பிரதமர் மோடி நிகழ்த்திய உரை:
வர்த்தக வாய்ப்புகளைப் பெறுவதற்கு சிறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் தங்களது நிறுவனத்தை ஜிஎஸ்டியுடன் கட்டாயம் இணைத்துக் கொள்ள வேண்டும்.
இதன்மூலம், சராசரி மக்களும், வர்த்தகர்களும் பயனடைவார்கள். ஜிஎஸ்டிக்கு வர்த்தகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும், வரிவிதிப்பு முறை குறித்து அவர்கள் எழுப்பியுள்ள பிரச்னைகளை தீர்க்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. பிரச்னைகளைத் தீர்ப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகங்களை நீங்கள் (தலைமைச் செயலர்கள்) அணுக வேண்டும்.
ரொக்கமற்ற பரிவர்த்தனையை முழுக்க முழுக்க நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு சமூகத்தை இட்டுச் செல்ல வேண்டும் என்று மோடி தெரிவித்தார்.
வங்கிகள் சார்ந்த குறைபாடுகளைக் களைவது குறித்தும் நிதிப் பிரிவு செயலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
ரயில்வே, சாலை, எரிசக்தி, நிலக்கரி, எரிவாயுக் குழாய் பதிப்பு ஆகிய துறைகளில்
மேற்கொள்ளப்பட்டுவரும் ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பிலான 9 உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்தும் மோடி ஆய்வு செய்தார். இந்தத் திட்டங்கள், தமிழகம், தெலங்கானா, கர்நாடகம், மேற்கு வங்கம், மணிப்பூர், மிúஸாரம் உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com