யூபிஎஸ்சி உறுப்பினர் சத்தர் சிங் ராஜிநாமா

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யூபிஎஸ்சி) உறுப்பினர் சத்தர் சிங் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யூபிஎஸ்சி) உறுப்பினர் சத்தர் சிங் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார்.
ஹரியாணாவின் பஞ்ச்குலா பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் அவரிடம் சிபிஐ 3 மாதங்களுக்கு முன்பு விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில் அவர் பதவி விலகியுள்ளார்.
அவரது பதவி விலகலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் கடிதம் அனுப்பிய செப்டம்பர் 22-ஆம் தேதியன்றே பதவி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பரில் சத்தர் சிங் யூபிஎஸ்சி உறுப்பினர் ஆனார். அடுத்த ஆண்டு மார்ச் வரை அவருக்கு பதவிக்காலம் உள்ளது. முன்னதாக ஹரியாணாவில் தொழிலக நிலம் ஒதுக்கப்பட்டதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அந்த மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, சத்தர் சிங் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் ஹூடா மற்றும் சத்தர் சிங்கிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
நில ஒதுக்கீடு நடந்தபோது ஹூடா அரசில் தலைமைச் செயலராக சத்தர் சிங் பணியாற்றி வந்தார். தொழில் நிறுவனங்களுக்கான நிலத்தை ஹூடா மற்றும் சில அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் முறைகேடாக தங்கள் பெயரில் மாற்றிக் கொண்டனர் என்பது இந்த வழக்கின் முக்கியக் குற்றச்சாட்டாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com