தேவையற்ற சண்டையை விட்டு விடலாம்: ஜேட்லியிடம் மன்னிப்பு  கோரினார் கேஜ்ரிவால்! 

தவறான தகவல்களின் அடிப்படையில் ஊழல் குற்றசாட்டுகளைக் கூறி விட்டதாகவும், தேவையற்ற சண்டையை விட்டு விடலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ..
தேவையற்ற சண்டையை விட்டு விடலாம்: ஜேட்லியிடம் மன்னிப்பு  கோரினார் கேஜ்ரிவால்! 

புதுதில்லி: தவறான தகவல்களின் அடிப்படையில் ஊழல் குற்றசாட்டுகளைக் கூறி விட்டதாகவும், தேவையற்ற சண்டையை விட்டு விடலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மன்னிப்பு  கோரியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்த பொழுது பெருமளவு ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டதாக, தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டு கூறுவதாக அர்விந்த் கேஜ்ரிவால் மீது அருண் ஜேட்லி 2015-ஆம் ஆண்டு ரூ.10 கோடி கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தார். 

பின்னர் அதே வழக்கின் விசாரணையின் பொழுது கேஜ்ரிவால் சார்பாக ஆஜரான பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி குறுக்கு விசாரணையின் பொழுது, அருண் ஜேட்லியினை நோக்கி தகாத வாரத்தை ஒன்றை பயன்படுத்தினார். அதனை கேஜ்ரிவால் அனுமதியுடன் கூறியதாக அவர் விளக்கமளித்தார். இதனால் கோபமுற்ற ஜேட்லி, மற்றுமொரு அவதூறு வழக்கினை கேஜ்ரிவால் மற்றும் அவரது கட்சி உறுப்பினர்கள் மீது தொடர்ந்தார்.

இந்நிலையில் தவறான தகவல்களின் அடிப்படையில் ஊழல் குற்றசாட்டுகளைக் கூறி விட்டதாகவும், தேவையற்ற சண்டையை விட்டு விடலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மன்னிப்பு  கோரியுள்ளார்.

இதுதொடர்பாக ஜேட்லிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

நாம் இருவரும் வெவேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், தேவையற்ற இந்த சட்ட சண்டையை விட்டு விட்டு, நமது திறமைக்கு ஏற்ப மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்று விரும்புகிறேன்.

நான் சமீபத்தில்தான் அந்த குறிப்பிட்ட ஊழல் குற்றசாட்டு தொடர்பான தகவல்கள் தவறானவை என்பதைக்  கண்டறிந்தேன். அதன் அடிப்படையில் நான் உங்கள் குற்றம் சுமத்தியதும் தவறானது. 

இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்று ஜேட்லி அவதூறு வழக்கினை விரைவில் வாபஸ் பெறுவார் என்று தெரிகிறது. இவ்வாறு தன்மீது போடப்பட்டுள்ள பல்வேறு அவதூறு வழக்குகளிலும் இருந்து வெளிவரும் முயற்சிகளை அர்விந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com