இறந்த தாயாரின் உடலைப் பதப்படுத்தி வைத்து இரண்டு ஆண்டுகளாக ஓய்வூதியம் பெற்று வந்த கொடூர மகன்!

இறந்த தாயாரின் உடலை இரண்டு ஆண்டுகளாக வீட்டினில் பதப்படுத்தி வைத்திருந்து, அவரது கைரேகைகளைப் பயன்படுத்தி மகன் ஓய்வூதியம் பெற்று வந்த கொடூரம் நிகழந்துள்ளது.
இறந்த தாயாரின் உடலைப் பதப்படுத்தி வைத்து இரண்டு ஆண்டுகளாக ஓய்வூதியம் பெற்று வந்த கொடூர மகன்!

கொல்கத்தா: இறந்த தாயாரின் உடலை இரண்டு ஆண்டுகளாக வீட்டினில் பதப்படுத்தி வைத்திருந்து, அவரது கைரேகைகளைப் பயன்படுத்தி மகன் ஓய்வூதியம் பெற்று வந்த கொடூரம் நிகழந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சுபாபிரதா மஜூம்தார். அங்குள்ள எஸ்என் சட்டர்ஜி சாலை பகுதியில் வசித்து வருகிறார். தோல் பதனிடுதல் துறையில் படிப்பை முடித்திருக்கிறார். இவரது தந்தை கோபால் மஜூம்தார். தாயார் பினா மஜூம்தார். இருவருமே ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்.

இவர்களில் பினா கடந்த 2015 ஆம் ஆண்டு  உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரணமடைந்துள்ளார். ஆனால் இதனை யாருக்கும் சொல்லாத சுபாபிரதா, இறந்த தாயாரின் உடலை யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு கொண்டு வந்து உள்ளார்.

அவரது உடலை தனது துறையை படிப்பு மூலம் பெற்ற அறிவைக் கொண்டு,  பல்வேறு ரசாயன கலவைகளை பயன்படுத்தி பதப்படுத்தி வைத்து உள்ளார். சுருக்கமாகச் சொலவதென்றால் உடலில் இருந்து முக்கிய பாகங்களை எடுத்து விட்டு, இறந்த தாயாரின் உடலை ஒரு 'மம்மி' போல குளிர்பதனப் பெட்டியில் பாதுகாத்து வைத்திருந்தார்.

அதேசமயம் பினாவுக்கு வரும் ஓய்வூதியதியமான ரூ.50 ஆயிரத்தை, அவரது கைரேகையை மட்டும் கவனமாகப் பயன்படுத்தி மாதா மாதம் பெற்று வந்துள்ளார். அத்துடன் தனது தாய் 'வாழ்வதற்கு உரிய  சான்றிதழை'யும் அதிகாரிகள் மூலம் பெற்று வைத்துள்ளார்.

சமீபத்தில் புகாரின் பேரில் போலீசார்  சுபாபிரதா வீட்டில் 'திடீர்' சோதனை நடத்தி பினாவின் உடலைக் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் இது தொடர்பாக விசாரணைக்காக சுபாபிரதா மற்றும் அவரது தந்தையை போலீசார் கைது செய்து உள்ளனர்

அதேசமயம் அந்த வீட்டில் அதேபோல் மேலும் ஒரு குளிர்சாதனப் பெட்டியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது, அது இறந்த பின்பு அவரது தந்தைகாகவா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com