'என்னைத் திட்டி அறையை விட்டு வெளியேற்றினார்: உபி முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக தலித் எம்.பி! 

என்னைத் திட்டி அறையை விட்டு வெளியேற்றினார் என்று உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக தலித் எம்.பி ஒருவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம் அதிர்ச்சியினைக் கிளப்பியுள்ளது
'என்னைத் திட்டி அறையை விட்டு வெளியேற்றினார்: உபி முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக தலித் எம்.பி! 

லக்னௌ: என்னைத் திட்டி அறையை விட்டு வெளியேற்றினார் என்று உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக தலித் எம்.பி ஒருவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம் அதிர்ச்சியினைக் கிளப்பியுள்ளது

உத்தரபிரதேச மாநிலம் ராபர்ட்ஸ்கஞ்ச் தொகுதியை சேர்ந்த தலித்  எம்.பி. சோட்டோ லால். சமீபத்தில் எஸ்சிஎஸ்டி சட்டத் தீர்ப்புக்கு எதிராக வடமாநிலங்களில் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது வன்முறை வெடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.

மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகளால் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை.  ஏற்பட்டது. இது தொடர்பாக முறையிட உபி மாநில முதல்வர் ஆதித்யநாத்தை சந்திக்க சோட்டோ லால் முயன்ற பொழுது அவரைச் சந்திக்காமல் கடிந்து பேசி அனுப்பியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் என்னைத் திட்டி அறையை விட்டு வெளியேற்றினார் என்று உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக சோட்டோ லால் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம் அதிர்ச்சியினைக் கிளப்பியுள்ளது  இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் இருப்பதாக குறிப்பிடப்படுவதாவது:

தலித்துகள் போராட்டம் தொடர்பாக உத்தரபிரதேச மாநில முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத்தை இரண்டு முறை சந்திக்க முயன்றேன். ஆனால் அவர் என்னை சந்திக்காமல் திட்டி விட்டார், அறையில் இருந்து வெளியேற்றினார்.

அத்துடன் சொந்த தொகுதியிலே மாவட்ட நிர்வாகத்தால் எனக்கு வேறுபாடு காட்டப்படுகிறது. சொந்த கட்சியை சேர்ந்தவர்கள் கூட இதனை ஒரு பிரச்சனையாக பார்ப்பது கிடையாது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையில் இருக்கும் ஊழல்கள் தொடர்பாக கடிதங்கள் எழுதியுள்ளேன். மாநிலத்தில் ஆட்சிமாற்றம் நடந்த பின்னரும் நிலை மாறவில்லை

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் சோட்டோ லால், தன்னுடைய புகார் கடிதத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில பா.ஜனதா தலைவர் மகேந்திர நான் பாண்டே மற்றும் சுனில் பன்சால் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டியுள்ளார் என்று தெரிகிறது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக  தேசிய எஸ்சி மற்றும் எஸ்டி ஆணையத்திடமும் அவர் தனிப்பட்ட முறையில் புகார் கடிதம் அளித்து உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக சோட்டோ லாலிடம் பிரதமர் மோடி உறுதியளித்து உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com