ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவுகளுக்கு எத்தனை சதவீத ஜிஎஸ்டி தெரியுமா?  

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவுகளுக்கு இனி 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவுகளுக்கு எத்தனை சதவீத ஜிஎஸ்டி தெரியுமா?  

புதுதில்லி: ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவுகளுக்கு இனி 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பொருள்களுக்கு ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்வதற்காக ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த வரி விதிப்பு முறையானது ஜூலை 1, 2017 முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவுகளுக்கு இனி 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெள்ளியன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இனி ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம் மற்றும் உணவுகளுக்கு 5% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும். பயணத்தின் பொழுது ரயில்களில் விறகப்படும் அனைத்து உணவு பொருட்களுக்கும் ஒரே அளவில் ஜி.எஸ்.டி வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com