நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிராக பாஜக உண்ணாவிரதம்: பிரதமர் மோடியும் பங்கேற்பு! 

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்கட்சிகளால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டதைக் கண்டித்து, பாஜக நடத்த திட்டமிட்டுள்ள உண்ணாவிரதத்தில், பிரதமர் மோடியும் பங்கேற்பார்... 
நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிராக பாஜக உண்ணாவிரதம்: பிரதமர் மோடியும் பங்கேற்பு! 

புதுதில்லி: பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்கட்சிகளால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டதைக் கண்டித்து, பாஜக நடத்த திட்டமிட்டுள்ள உண்ணாவிரதத்தில், பிரதமர் மோடியும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.     

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீரவ் மோடி வங்கிக் கடன் மோசடி உள்ளிட்ட பல விவகாரங்களை முன்வைத்து காங்கிரஸ், அ.தி.மு.க., தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டது. இந்நிலையில் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றும் அமளி நீடித்தது. இன்று கூட்டத் தொடர் முடிவடைந்து பாராளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பாராளுமன்ற வளாகத்தில் செவ்வாயன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாராளுமன்ற விவகாரங்கத் துறை அமைச்சர் அனந்தகுமார், 'தொடர்ந்து பாராளுமன்றத்தை முடக்கிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் போக்கை கண்டித்து வரும் 12-ம் தேதி பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்' என்று தெரிவித்திருந்தார்.

மேலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் வரும் 12-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா ஹுப்ளி நகரில் உண்ணாவிரதம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் அன்றைய தினம் உண்ணாவிரதத்தில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும்  தில்லியில் உள்ள தனது அலுவலகத்தில் வழக்கமான பணிகளை அவர் மேற்கொள்ளவர் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com