மத்திய பிரதேச வாக்காளர் பட்டியலிலிருந்து 11 லட்சம் பெயர்கள் நீக்கம்! 

மத்திய பிரதேச வாக்காளர் பட்டியலிலிருந்து 11 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச வாக்காளர் பட்டியலிலிருந்து 11 லட்சம் பெயர்கள் நீக்கம்! 

போபால்: மத்திய பிரதேச வாக்காளர் பட்டியலிலிருந்து 11 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத் தலைமை தாங்கினார். அப்பொழுதுதான் மத்திய பிரதேச வாக்காளர் பட்டியலிலிருந்து 11 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ராவத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய பிரதேச வாக்காளர் பட்டியலிலிருந்து 11 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் வாக்களிக்காமலே இருப்பவர்கள்,  இடமாற்றம் செயப்பட்டவர்கள், இறந்து போனவர்கள் அல்லது இரட்டைப் பதிவு கொண்டவர்கள் ஆகியோராவார்கள்.

முன்னதாக ஜனவரி 15-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் ஆய்வில் 3,83,203  பெயர்கள் தகுதி அற்றவை என்று கண்டறியப்பட்டன. அதேபோல் பின்னர் மார்ச் 15 முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரையில் நடத்தப்பட்ட சிறப்பு மறு ஆய்வில் 6,73,884 பெயர்கள் கண்டறியப்பட்டன.  

தொடர்ந்து பெண்கள் அதிக அளவில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைப் பதிவு செய்வதை உறுதி செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com