சீனா, மங்கோலியா நாடுகளுக்கு சுஷ்மா ஸ்வராஜ் பயணம்

சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பயணம் மேற்கொள்கிறார். 
சீனா, மங்கோலியா நாடுகளுக்கு சுஷ்மா ஸ்வராஜ் பயணம்

சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏப்ரல் 22 மற்றும் 23-ஆம் தேதி சீனா, 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் மங்கோலியா ஆகிய நாடுகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தின் போது சீனாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கருத்தரங்கில் கலந்துகொள்கிறார். இதில் 2017-ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுநேர பிரதிநிதியாக இணைந்துள்ளது. 

பின்னர் சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் ஈ உடன் சுஷ்மா ஸ்வராஜ் இரு நாடுகளின் உறவு குறித்து கலந்துரையாடுகிறார் என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள டோக்லாம் பிரச்னை கடந்த 1 வருடமாக நீடித்து வரும் நிலையில், இவர்களின் சந்திப்பு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com