மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் நடைமுறைகள் ஏப்ரல் 16 வரை 'சஸ்பெண்ட்': உயர் நீதிமன்றம் உத்தரவு! 

மேற்கு வங்க மாநில பஞ்சாயத்து தேர்தல் நடைமுறைகளை ஏப்ரல் 16-ஆம் தேதி வரை 'சஸ்பெண்ட்' செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் நடைமுறைகள் ஏப்ரல் 16 வரை 'சஸ்பெண்ட்': உயர் நீதிமன்றம் உத்தரவு! 

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில பஞ்சாயத்து தேர்தல் நடைமுறைகளை ஏப்ரல் 16-ஆம் தேதி வரை 'சஸ்பெண்ட்' செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைமுறைகள் வேட்புமனுத் தாக்கலுடன்  கடந்த மூன்றாம் தேதி தொடங்கியது. 9-ம் தேதி வேட்புமனு தாக்குதலுக்கான கடைசி நாளாகும். அதன்படி கட்சிகள் வேட்புமனுவை தாக்கல் செய்தன.

ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது இதர கட்சிகளை வேட்புமனுவை தாக்கல் செய்ய விடவில்லை என இடதுசாரிகள், பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதனிடையே 10-ம் தேதி வரையில் வேட்பு மனு தாக்கல் தேதியை நீட்டிப்பு செய்து தேர்தல் ஆணையம்  அறிவிப்பு வெளியிட்டது. பின்னர் கடைசி நேரத்தில் அதனை ரத்து செய்தது.

இதுதொடர்பாக பாரதிய ஜனதா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. பின்னர் உச்ச நீதின்றம் இதில் தலையிட மறுத்து விட்டதால், வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பஞ்சாயத்து தேர்தலில் வேட்பாளர்கள் வேட்புமனுவை ஆய்வு செய்தல், ஏற்றல் மற்றும் தள்ளுபடி செய்துவது தொடர்பான எந்த ஒரு பணியையும் ஏப்ரல் 16-ம் தேதி வரையில் மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட்டது. 

அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க தேர்தல் ஆணையம் முழுமையான விசாரணை நடத்தி  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com