அறிவிப்பில்லா மின்வெட்டுக்கு நுகர்வோரிடம் அபராதம் செலுத்தும் திட்டம்: தில்லி அரசு அறிமுகம்

முன் அறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டுக்கு நுகர்வோரிடம் அபராதம் செலுத்தும் திட்டத்தை தில்லி அரசு செவ்வாய்கிழமை ஏற்படுத்தியுள்ளது.
அறிவிப்பில்லா மின்வெட்டுக்கு நுகர்வோரிடம் அபராதம் செலுத்தும் திட்டம்: தில்லி அரசு அறிமுகம்

முன் அறிவிப்பின்றி ஏற்படுத்தப்படும் மின்வெட்டு ஒரு மணிநேரத்துக்குள் சரிசெய்யப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நுகர்வோரிடம் மின்சாரம் விநியோகிக்கும் தனியார் நிறுவனம் அபராதம் செலுத்தும் திட்டத்தை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதன்மூலம் திடீரென ஏற்படும் மின்வெட்டு பாதிப்பு ஒரு மணி நேரத்துக்குள்ளாக சரிசெய்யப்பட வேண்டும். அது தவறும் பட்சத்தில் அவ்வாறு மின் விநியோகம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நுகர்வோருக்கும் முதல் இரண்டு மணிநேரங்களுக்கு ரூ.50 மற்றும் அதற்கும் மேற்பட்டால் ரூ.100 சம்பந்தப்பட்ட மின் விநியோகம் செய்யும் தனியார் நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்.

இந்த அபராத தொகையானது சம்பந்தப்பட்ட நுகர்வோரின் மின் கட்டணத்தில் இருந்து குறைக்கப்படும்.

இத்திட்டத்துக்கான அரசாணை தில்லி அரசால் செவ்வாய்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அனுமதி வழங்கியுள்ளார். இதையடுத்து தற்போது புது தில்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜல் ஒப்புதலுக்காக இத்திட்டம் தயார் நிலையில் உள்ளது. 

நுகர்வோருக்கு சாதகமான இந்த திட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் நிச்சயம் அனுமதி வழங்குவார் என்று தில்லி அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இது இதர மாநிலங்களுக்கும் நுகர்வோர் சேவையில் சிறந்த உதாரணமாக விளங்கும் என்றும் தில்லி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com