அப்போது 2 எம்.பி-க்கள் என கேலி செய்தார் ராஜீவ், இப்போது 20 மாநிலங்களை ஆள்கிறோம்: அமித்ஷா

பாஜக துவங்கிய காலகட்டத்தில் எங்களிடம் 2 எம்.பி-க்கள் மட்டுமே உள்ளதாக மறைந்த பிரதமர் ராஜீவ் கேலி செய்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.
அப்போது 2 எம்.பி-க்கள் என கேலி செய்தார் ராஜீவ், இப்போது 20 மாநிலங்களை ஆள்கிறோம்: அமித்ஷா

கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக அங்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அங்கு 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த தத்துவவாதி பாஸவண்ணாவுக்கு புதன்கிழமை ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமித்ஷா அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:

கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் ஹிந்து தீவிரவாதம், காவித் தீவிரவாதம் இருப்பது போன்ற குற்றச்சாட்டுகளை ஏற்படுத்தி, உலகளவில் நாட்டுக்கு தலைக்குணிவை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இப்போது அதுபோன்ற குற்றச்சாட்டுகளை தெரிவிக்கவில்லை என்று மறுத்து வருகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்பட பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 

முதன்முறையாக பாஜக துவங்கியபோது 2 எம்.பி-க்கள் மட்டுமே உள்ளனர் என்று காங்கிரஸ் தலைவரும், மறைந்த பிரதமருமான ராஜீவ் கேலி செய்துளளார். குறிப்பாக நாம் இருவர் நமக்கு இருவர் என்பது போன்ற வாசகங்களால் பாஜக-வை கிண்டலடித்துள்ளார். ஆனால் இப்போதைய நிலை வேறு. நாடாளுமன்றத்தில் அரிதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருகிறோம்.

20 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் 1,600 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜக-வுக்கு உள்ளனர். இது தவிர பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளிலும் பாஜக ஆட்சி செய்து வருகிறது. உண்மையில் தற்போது ராகுல் செய்து வரும் செயல்கள் தான் பயங்கரவாதம் ஆகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com