கர்நாடக தேர்தல்: மெஹுல் சோக்ஸி வழக்கறிஞருக்கு வாய்ப்பு வழங்கிய காங்கிரஸ்

கர்நாடகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மெஹுல் சோக்ஸி வழக்கறிஞருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக தேர்தல்: மெஹுல் சோக்ஸி வழக்கறிஞருக்கு வாய்ப்பு வழங்கிய காங்கிரஸ்

கர்நாடக மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 12-ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 224 தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையடுத்து ஏப்ரல் 15-ஆம் தேதி 218 வேட்பாளர்களைக் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இதில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக அக்கட்சியில் பெரும் எதிர்ப்புகள் ஏற்பட்டு வருகிறது. வாய்ப்பு மறுக்கப்பட்ட சில முக்கிய கட்சியினர் கட்சி தலைமைக்க எதிராக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் மெஹுல் சோக்ஸியின் வழக்கறிஞருக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞரான ஹெச்.எஸ்.சந்திரமௌலிக்கு மடிகேரி எனும் தொகுதியில் இருந்து போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து வேட்பாளர் பட்டியலில் இருந்து அவர் புதன்கிழமை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கட்சியினரின் போராட்டத்தை தொடர்ந்து காங்கிரஸ் இம்முடிவை மேற்கொண்டுள்ளது.

முன்னதாக, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,646 கோடி வரை கடன் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கீதாஞ்சலி ஜெம்ஸ் உரிமையாளர் மெஹுல் சோக்ஸி, வழக்கில் அவருக்கு ஆதரவாக ஹெச்.எஸ்.சந்திரமௌலி வழக்கறிஞராக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com