ரூ.2,654 கோடி கடன் மோசடி விவகாரம்: குஜராத் தொழிலதிபர் கைது, சிபிஐ நடவடிக்கை

குஜராத்தில் உள்ள வதோராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரூ.2,654 கோடி கடன் மோசடி செய்த விவகாரத்தில் தனது மகன்களுடன் சிபிஐ-யால் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூ.2,654 கோடி கடன் மோசடி விவகாரம்: குஜராத் தொழிலதிபர் கைது, சிபிஐ நடவடிக்கை

குஜராத்தில் உள்ள வதோராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரூ.2,654 கோடி கடன் மோசடி செய்த விவகாரத்தில் தனது மகன்களுடன் சிபிஐ-யால் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

டைமண்ட் எரிசக்தி உள்கட்டமைப்பு நிறுவனத்தின் அதிபரான நாராயண் பட்னாகர் மற்றும் அவரது மகன்கள் அமித் மற்றும் சுமித் ஆகியோரை ராஜஸ்தானில் சிபிஐ கைது செய்தது.

இவர்கள் 3 பேரும் இணைந்து பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.670.51 கோடி, பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.348.99 கோடி, ஐசிஐசிஐ வங்கியில் ரூ.279.46 கோடியும் கடன் பெற்றுள்ளனர். 2008-ஆம் ஆண்டு முதல் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் மொத்தம் ரூ.2 ஆயிரத்து 654 கோடி கடன் திருப்பிச் செலுத்தவில்லை.

எனவே 2016–17–ஆம் நிதியாண்டில் இவைகள் வாராக்கடன்களாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து இந்த 3 பேரும் கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல் தலைமறைவாகி விட்டதாக வங்கிகளின் கூட்டமைப்பு சிபிஐ-யிடம் புகார் அளித்தன. மேலும் கடன் பெற போலியான ஆவணங்களை சமர்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் உள்ள பரஸ் மஹால் என்ற சொகுசு விடுதியில் பதுங்கியிருந்த 3 பேரையும் பயங்கரவாத தடுப்பு படை உதவியுடன் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com