உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கும்படி வெங்கைய நாயுடுவிடம் எதிர்க்கட்சியினர் மனு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்கும்படி கோரி குடியரசுத் துணைத் தலைவரிடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கும்படி வெங்கைய நாயுடுவிடம் எதிர்க்கட்சியினர் மனு

புது தில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்கும்படி கோரி குடியரசுத் துணைத் தலைவரிடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நீதித் துறை சுதந்திரமாக செயல்பட வேண்டியதை உறுதி செய்யவும், அதில் எந்த தலையீடும் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் இந்த மனு அளிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவை சந்தித்த எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கும்படி வலியுறுத்தி காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய மார்க்சிஸ்ட் கட்சியினர், தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளைக் சேர்ந்த 71 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட மனுவை அளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com