உ.பி., பிகார் சட்டமேலவை தேர்தல்: ஆதித்யநாத், நிதிஷ், சுஷில் குமார் மோடி போட்டியின்றி தேர்வு

உத்தரப் பிரதேச சட்டமேலவை உறுப்பினராக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிகார் சட்டமேலவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள துணை முதல்வர் சுஷில்குமார் மோடி மற்றும் பாஜகவினர்.
பிகார் சட்டமேலவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள துணை முதல்வர் சுஷில்குமார் மோடி மற்றும் பாஜகவினர்.

உத்தரப் பிரதேச சட்டமேலவை உறுப்பினராக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல், பிகார் மாநில சட்டமேலவை உறுப்பினர்களாக அந்த மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச சட்டமேலவையில் காலியான 13 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. 
இதில் பாஜக சார்பில் முதல்வர் யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள் மகேந்திர சிங், மொஹிசின் ரஸா உள்ளிட்ட 10 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். 
பாஜகவின் கூட்டணி கட்சியினான அப்னா தளம் (எஸ்) கட்சி சார்பில் ஒருவரும் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
பகுஜன் சமாஜ் சார்பில் ஒருவரும், சமாஜவாதி கட்சி சார்பில் ஒருவரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். 
இவர்கள் 13 பேரையும் எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால் 13 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் அதிகாரி அசோக் சௌபே வியாழக்கிழமை வெளியிட்டார்.
பிகாரில்...: பிகார் சட்டமேலவையில் 11 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 
இந்தத் தேர்தலில் முதல்வர் நிதீஷ் குமார், பாஜக மூத்த தலைவரும், துணை முதல்வருமான சுஷில்குமார் மோடி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராஃப்ரி தேவி உள்ளிட்ட 11 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அவர்களை எதிர்த்து யாரும் மனுக்களை தாக்கல் செய்யவில்லை.
வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு வியாழக்கிழமை கடைசி நாளாகும். எனினும், யாரும் வேட்பு மனுவை திரும்பப் பெறவில்லை. 
இதனால் 11 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com