சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்க சட்டத் திருத்தம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல்! 

சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்தால் தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் போக்ஸோ சட்டத்தில்  திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்க சட்டத் திருத்தம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல்! 

புதுதில்லி: சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்தால் தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் போக்ஸோ சட்டத்தில்  திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக நாடு முழுவதும் சிறுமிகளுக்கு எதிரான அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு உச்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று பொது மக்கள் மத்தியில் குரல்கள் வலுத்துள்ளன.

இந்நிலையில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில்  பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை வெள்ளியன்று நடைபெற்றது. அப்பொழுது மத்திய அரசின் சார்பில் கடிதம் ஒன்று சமர்பிக்கப்பட்டது.

அந்த கடிதத்தில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்வோருக்கு தூக்குத் தண்டனை அளிக்கும் வகையில் 'போக்ஸோ' சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கினை ஏப்ரல் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com