காவிரி மேலாண்மை வாரியம் அரசியலமைப்புக்கு விரோதமான ஒன்று: மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம்! 

காவிரி மேலாண்மை வாரியம் அரசியலமைப்புக்கு விரோதமான ஒன்று என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் ஒன்றில்,  கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அரசியலமைப்புக்கு விரோதமான ஒன்று: மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம்! 

பெங்களூரு: காவிரி மேலாண்மை வாரியம் அரசியலமைப்புக்கு விரோதமான ஒன்று என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் ஒன்றில்,  கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தியது. மேலும் நீதிமன்றம் அளித்த 6 வார காலக்கெடு முடிவடைந்த நிலையில், ‘ஸ்கீம்‘ என்பதற்கு விளக்கம் கோரியும், செயல் திட்டத்தை அமல்படுத்த மேலும் 3 மாத கால அவகாசமும் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்தது.

இந்த மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்றம் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை மே மாதம் 3–ந் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு கடந்த 9–ந் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அரசியலமைப்புக்கு விரோதமான ஒன்று என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் ஒன்றில்,  கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு அவர் சனிக்கிழமையன்று எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை மே மாதம் 3–ந் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆனால் இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடக அரசு கடுமையாக எதிர்க்கிறது. ஏனென்றால், காவிரி மேலாண்மை வாரியம் என்பது நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட ஒன்று கிடையாது.

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  எந்த வழிமுறையையும் நீதிமன்றம் எடுத்து கூறவில்லை. அத்துடன் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டதே தவிர அதுதொடர்பான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

எனவே உச்ச நீதிமன்றத்தில் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்வதற்கு முன்பாக உங்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com