பொதுப் போக்குவரத்து வாகனங்களில் இந்த வசதி வர இன்னும் ஒரு ஆண்டு காலம் ஆகும் போல

இந்தியாவில் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் ஆபத்து சமயங்களில் பயன்படுத்தும் பொத்தான்கள் அமைக்க இன்னும் ஒரு ஆண்டு காலம் ஆகும் என்று தெரிகிறது.
பொதுப் போக்குவரத்து வாகனங்களில் இந்த வசதி வர இன்னும் ஒரு ஆண்டு காலம் ஆகும் போல


சென்னை: இந்தியாவில் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் ஆபத்து சமயங்களில் பயன்படுத்தும் பொத்தான்கள் அமைக்க இன்னும் ஒரு ஆண்டு காலம் ஆகும் என்று தெரிகிறது.

பொதுப் போக்குவரத்து வாகனங்களில் ஜிபிஎஸ் இணைக்கப்பட்ட ஆபத்து கால பொத்தான்களை அமைக்க ஏற்கனவே அளித்த காலக்கெடுவை 2019ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி வரை நீட்டித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

அவசர கால அல்லது ஆபத்து காலங்களில், பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் இந்த பொத்தான்களை அழுத்துவதன் மூலம், உடனடியாகக் காவல்துறையின் உதவியைப் பெறும் வகையில் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி மத்திய அரசு கொண்டு வந்த மத்திய மோட்டார் வாகன விதிமுறைகளின்படி அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும், உதாரணமாக பேருந்துகள், கார்களில் ஆபத்துகால பொத்தான்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கி, அதற்கு 2018 ஏப்ரல் 1ம் தேதி வரை காலக்கெடு அளித்திருந்தது.

ஆனால், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில், ஆபத்துகால பொத்தான்களை அமைத்து, அதற்கான கட்டுப்பாட்டு மையங்களை ஏற்படுத்தும் பணிகள் பூர்த்தியடையாத நிலையில், காலக்கெடுவை மேலும் ஓர் ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இந்தியாவில் இயக்கப்படும் 5 ஆயிரம் ஓலா கார்களில் இந்த ஆபத்துகால பொத்தான்கள் பொருத்தப்பட்டுவிட்டன. ஆனால், மாநில அரசுகள், ஆபத்துகால பொத்தான்களுக்கான ஒட்டுமொத்த கட்டுப்பாட்டு மையங்களை அமைக்காத வரை இவை செயல்படாது. 

இந்த பொத்தான்கள், கார் ஓட்டுநர்களுக்கான இருக்கைக்குப் பின்னால் மேல் பகுதியில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொத்தான்களை இதுவரை பயன்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com