இறக்குமதியான வட இந்தியத் தலைவர்களால் டம்மியாக்கப்பட்ட எடியூரப்பா: கிண்டல் செய்த சித்தராமையா! 

கர்நாடகத் தேர்தலுக்காக இறக்குமதியான வட இந்தியத் தலைவர்களால் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா டம்மியாக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வரான சித்தராமையா கிண்டல் செய்துள்ளார்.
இறக்குமதியான வட இந்தியத் தலைவர்களால் டம்மியாக்கப்பட்ட எடியூரப்பா: கிண்டல் செய்த சித்தராமையா! 

பெங்களூரு: கர்நாடகத் தேர்தலுக்காக இறக்குமதியான வட இந்தியத் தலைவர்களால் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா டம்மியாக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வரான சித்தராமையா கிண்டல் செய்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத்த தேர்தல் மே மாதம் 12-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா தீவிரமாக முனைப்புக் காட்டி வருகிறது.

பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அத்துடன் பாஜகவுக்கு ஆதரவாக மத்திய மந்திரிகள் பலரும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்நிலையில் கர்நாடகத் தேர்தலுக்காக இறக்குமதியான வட இந்தியத் தலைவர்களால் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா டம்மியாக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வரான சித்தராமையா கிண்டல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மாநிலத்தில் தலைவர்கள் இல்லாத காரணத்தினால் மாநில பாரதிய   ஜனதா, பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் என வட இந்தியாவில் இருந்து தலைவர்களை இறக்குமதி செய்கிறது. இதனால் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டு உள்ள எடியூரப்பாவை டம்மியாக்கி விட்டார்கள்.

பிரதமர் மோடி இங்கு வரலாம், போகலாம். ஆனால் கர்நாடகாவில் மோதல் எனக்கும், எடியூரப்பாவிற்கும் இடையில்தான். மே 12 தேர்தலில் யார் வெற்றிப்பெறுவார் என்பது காவி கட்சிக்கு தெரியும்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் சித்தராமையா வட இந்தியா என்று குறிப்பிட்டதை பாஜக விமர்சனம் செய்து உள்ளது. வட மற்றும் தென் இந்தியா என பிளவுபடுத்தும் முயற்சியில் சித்தராமையா இறங்கி உள்ளார் என பா.ஜனதா விமர்சனம் செய்து உள்ளது. அத்துடன் காங்கிரசின் சோனியா காந்தியினை ‘இறக்குமதி தலைவி' என பாஜகவினர் விமசித்து வருகின்றனர் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com