உங்களது 'கட்டிப்பிடி கொள்கை' எடுபடாது: மோடியை கிண்டல் செய்யும் ராகுல் காந்தி

அமெரிக்காவின் எச்1-பி விசா விவகாரத்தில் உங்களது 'கட்டிப்பிடி கொள்கை' எடுபடாது என்று பிரதமர் : மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
உங்களது 'கட்டிப்பிடி கொள்கை' எடுபடாது: மோடியை கிண்டல் செய்யும் ராகுல் காந்தி

புதுதில்லி: அமெரிக்காவின் எச்1-பி விசா விவகாரத்தில் உங்களது 'கட்டிப்பிடி கொள்கை' எடுபடாது என்று பிரதமர் : மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் நிரந்தரமாக தங்காமல், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு தங்கி பணியாற்றுவோருக்கு 'எச்1-பி' எனப்படும் வகை விசா வழங்க ப்படுவது வழக்கம். ஆனால் சமீப காலமாக இந்த விசா வழங்குவதில் கடும் கிடுக்கிப்பிடிகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்துள்ளார்.

அதன்படி விண்ணப்பம் செய்பவரின் மனைவி அமெரிக்காவில் வந்து எந்த நிறுவனத்திலும் வேலை செய்யக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைங்களை விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல்லாயிரக்ணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. குறிப்பாக மனைவியை உடன் அழைத்துச் செல்லும் இந்தியர்களுக்கு இந்த விதிமுறை பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் எச்1-பி விசா விவகாரத்தில் உங்களது 'கட்டிப்பிடி கொள்கை' எடுபடாது என்று பிரதமர் மோடியை,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வியாழன் அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

அமெரிக்காவின் எச்1-பி விசா வழங்கும் புதிய விதிகள் அமெரிக்கா சென்று பணியாற்றும் இந்தியர்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது. பல்வேறு கிடுக்கிப்பிடிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தியாவுக்கும் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது.

மோடி தனது கட்டிப்பிடி கொள்கையின் மூலம் சிலவற்றை வாங்க முடியும் என நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், விசா என்பது அவர்வர்களின் சொந்த முயற்சியால் பெறுவதாகும். இதுதான் பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கையா?  இந்தக் கொள்கைக்கு அதிபர் டிரம்ப் முன்னுரை எழுதியிருக்கிறாரா?

இவ்வாறு ராகுல் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com