கர்நாடக தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நாளை வெளியிடுகிறார் ராகுல்

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை (ஏப்.27) வெளியிடவுள்ளார்.
கர்நாடக தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நாளை வெளியிடுகிறார் ராகுல்

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை (ஏப்.27) வெளியிடவுள்ளார்.
 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு வரும் மே மாதம் 12ஆம் தேதி ஓரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 15ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.
 இத்தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி வரும் வெள்ளிக்கிழமை வெளியிடவுள்ளார். இதுகுறித்து தில்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி, மங்களூரில் வெள்ளிக்கிழமை வெளியிடுகிறார்; அதில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சில அறிவிப்புகள் உள்ளன' என்றார்.
 கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, அந்த மாநிலத்தில் ராகுல் காந்தி இதுவரை 6 கட்டங்களாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கடைசியாக தனது 6ஆவது கட்ட தேர்தல் பிரசாரத்தை கடந்த 7ஆம் தேதி முதல் இரு நாள்கள் ராகுல் மேற்கொண்டார்.
 இதையடுத்து, 7ஆவது கட்டமாக வியாழக்கிழமை (ஏப்.26) முதல் இரு நாள்கள் அவர் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது அவர், அங்கோலா சிட்டி, மஸ்டிகட்டே சர்க்கிள், சரஸ்வதி சர்க்கிள் போன்ற உத்தர கன்னடா பகுதிகளுக்கு செல்லவுள்ளார்.
 முன்னதாக, 6 கட்ட பிரசாரத்தின் நிறைவில், கர்நாடக மக்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தேர்தல் அறிக்கையை தயாரிக்கும்படி காங்கிரஸ் தலைவர்களை ராகுல் கேட்டுக் கொண்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com