கர்நாடக பாஜக வேட்பாளர்களுடன் மோடி இன்று ஆலோசனை

கர்நாடக மாநில பாஜக வேட்பாளர்கள் மற்றும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஆலோசனை
கர்நாடக பாஜக வேட்பாளர்களுடன் மோடி இன்று ஆலோசனை

கர்நாடக மாநில பாஜக வேட்பாளர்கள் மற்றும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஆலோசனை நடத்த இருக்கிறார். செல்லிடப்பேசி செயலி மூலம் நடைபெறவுள்ள இந்த ஆலோசனையில், கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து கட்சியினருடன் மோடி முக்கியமாக விவாதிக்க இருக்கிறார்.
 கர்நாடகத்தில் மே 12-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் முடிவுகள் இழுபறியாகவே இருக்கும் என்று பல்வேறு கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், வெற்றியை தங்கள் வசமாக்க காங்கிரஸýம், பாஜகவும் முழுவீச்சில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
 வேட்பாளர்களுக்கு மோடி வழங்க இருக்கும் ஆலோசனை குறித்த பாஜக வட்டாரங்கள் கூறுகையில், "தேர்தல் பிரசார உத்தி எந்த வகையில் இருக்க வேண்டும் என்பது குறித்து வேட்பாளர்களுக்கு மோடி ஆலோசனை வழங்க இருக்கிறார். மக்களிடம் பாஜகவின் திட்டங்களை எவ்வாறு எடுத்துச் செல்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. கர்நாடகத்தில் மோடி மே 1-ஆம் தேதியன்று பிரசாரத்தைத் தொடங்குகிறார். 15 முதல் 20 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று மக்களைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்' என்று தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com