ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் மூத்த அரசியல் தலைவர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் புதன்கிழமை தாக்குதல் நடத்தியதில் மூத்த அரசியல் தலைவர் ஒருவர் பலியானார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் புதன்கிழமை தாக்குதல் நடத்தியதில் மூத்த அரசியல் தலைவர் ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த காவலர்கள் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 முன்னதாக, காயமடைந்த மூத்த தலைவர் குலாம் நபி படேலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். தாக்குதல் நடைபெற்ற புல்வாமா மாவட்டத்தின் ராஜ்போரா செளக் பகுதியை சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 இந்தத் தாக்குதலுக்கு மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மூத்த தலைவர் குலாம் நபி படேலின் குடும்பத்தினருக்கு இதயப்பூர்வமான இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதிகளின் இந்த கோழைத்தனமான நடவடிக்கையால் மற்றுமொரு குடும்பம் சீர்குலைந்துள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 கட்சிகள் குழப்பம்: பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியான மூத்த தலைவர் குலாம் நபி படேல் எந்தக் கட்சியை சார்ந்தவர் என அடையாளப்படுத்துவதில் அரசியல் கட்சிகளிடையே குழப்பம் நிலவுகிறது. முதல்வர் மெஹபூபா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
 இதனிடையே, குலாம் நபி படேலை தங்கள் கட்சி என அடையாளப்படுத்திக் கொள்வதில் காங்கிரஸýக்கும், பிடிபிக்கும் சிக்கல் இருக்குமானால், அவரை தேசிய மாநாட்டுக் கட்சியை சார்ந்தவராக ஏற்றுக்கொள்ளலாம் என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com