பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் சட்டப் பாதுகாப்பு: மேனகா காந்தி வலியுறுத்தல்

பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் ஆண் குழந்தைகளுக்கும் உரிய சட்டப் பாதுகாப்பும், நிவாரணமும் அளிக்கப்பட வேண்டும் என்று 
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் சட்டப் பாதுகாப்பு: மேனகா காந்தி வலியுறுத்தல்

பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் ஆண் குழந்தைகளுக்கும் உரிய சட்டப் பாதுகாப்பும், நிவாரணமும் அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
 பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை சுட்டிக் காட்டி அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
 12 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு அண்மையில் அவசரச் சட்டம் கொண்டு வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்காக மாவட்டம்தோறும் உதவி மையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 இந்நிலையில், பெண் குழந்தைகளுக்கு பாலியல் பலாத்கார சம்பவங்களில் இருந்து பாதுகாப்பு அளிக்க சட்டம் உள்ளதுபோல, ஆண் குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஏனெனில், பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் ஆண் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று மேனகா காந்தியிடம் சமூக அமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
 இது தொடர்பாக மேனகா காந்தி கூறியதாவது:
 பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்படும் குழந்தைகளில் ஆண், பெண் என்ற பாகுபாடு காட்டத் தேவையில்லை என்று கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனை நானும் ஏற்கிறேன். பெண் குழந்தைகளுக்கு இருப்பதுபோல ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து உரிய பாதுகாப்பு தேவை என்பது கட்டாயமானதுதான். இந்த கோரிக்கை மத்திய சட்ட அமைச்சகத்திடம் உரிய வழியில் கொண்டு செல்லப்படும்.
 கடந்த ஆண்டு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்டது. இது பாலினப்பாகுபாடு இல்லாமல் அனைத்துக் குழந்தைகளுக்கும் பொதுவாகவே அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளின் பிரச்னைகளை தீர்ப்பதில் முழூவிச்சில் செயல்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com