வாராக் கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்களை நாடும் பிஎன்பி

கடன் வாங்கிவிட்டு, பின்னர் இருப்பிடம் தெரியாமல் தலைமறைவாக இருக்கும் நபர்களை கண்டுபிடிப்பதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கி துப்புறியும் நிறுவனங்களை நாடியுள்ளது.

கடன் வாங்கிவிட்டு, பின்னர் இருப்பிடம் தெரியாமல் தலைமறைவாக இருக்கும் நபர்களை கண்டுபிடிப்பதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கி துப்புறியும் நிறுவனங்களை நாடியுள்ளது.
 அந்த வங்கியின் வாராக் கடன் அளவு கடந்த டிசம்பரில் ரூ.57,519 கோடியாக அதிகரித்துள்ள நிலையில், அவற்றை மீட்பதற்கான முயற்சிகளில் ஒன்றாக பஞ்சாப் நேஷனல் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
 துப்பறியும் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்று புதன்கிழமை அறிக்கை வெளியிட்ட அந்த வங்கி, வாராக் கடனை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கள அதிகாரிகளுக்கு துணையாக செயல்படும் வகையில், துப்பறியும் நிறுவனங்களின் சேவையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
 அந்த அறிக்கையின்படி, விருப்பமுள்ள துப்பறியும் நிறுவனங்கள் உரிய ஆவணங்களுடன் மே 5-ஆம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு, வாராக் கடனாக கணிக்கப்பட்டுள்ள கணக்குகளின் விவரங்கள் அளிக்கப்படும். அந்தக் கடன் கணக்குடன் தொடர்புடையவர்களின் இருப்பிடம் (உள்நாடு மற்றும் வெளிநாடு) உள்ளிட்ட விவரங்களை துப்பறியும் நிறுவனங்கள் அறிந்து, வங்கிக்கு தகவல் அளிக்க வேண்டும்.
 அத்துடன், சம்பந்தப்பட்ட நபர்களின் வாரிசுகள், கடன் தொகையை செலுத்தும் பொறுப்புடையவர்கள், அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் குறித்தும் துப்பறியும் நிறுவனங்கள் தகவல் சேகரித்து வங்கிக்கு வழங்க வேண்டும்.
 பணியில் இருக்கும் துப்பறியும் நிறுவனங்கள் அறிக்கை தாக்கல் செய்ய அதிகபட்சம் 60 நாள்கள் அவகாசமாக வழங்கப்படும். வழக்கின் தன்மையை பொறுத்து அது 90 நாள்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com