இந்திய-சீன உறவை மேம்படுத்த தொலைநோக்குப் பார்வையில் ஆய்வு: சீனப் பயணம் குறித்து மோடி கருத்து

இந்தியா - சீனா இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை தொலைநோக்கு பார்வையில் சீன அதிபர் ஷீ ஜின்பிங்குடன் சேர்ந்து மறுஆய்வு செய்ய இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இந்திய-சீன உறவை மேம்படுத்த தொலைநோக்குப் பார்வையில் ஆய்வு: சீனப் பயணம் குறித்து மோடி கருத்து

இந்தியா - சீனா இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை தொலைநோக்கு பார்வையில் சீன அதிபர் ஷீ ஜின்பிங்குடன் சேர்ந்து மறுஆய்வு செய்ய இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
 பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக வியாழக்கிழமை இரவு சீனா சென்றார். அங்குள்ள வூஹான் நகரில் சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை அவர் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசுகிறார். சீனாவுக்குப் புறப்படும் முன் தனது பயணம் குறித்து மோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "இந்தியா-சீனா இடையேயான இரு தரப்பு விவகாரங்கள் முதல் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் வரை பல்வேறு விஷயங்களில் ஷீ ஜின்பிங்கும், நானும், எங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறோம்'' என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
 இதனிடையே, இந்தியா-சீனா இடையே நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு மோடியும், ஷீ ஜின்பிங்கும் முயற்சி செய்வார்கள் என்று சீன வெளியுறவுத் துறை இணையமைச்சர் கோங் சுவான்யூ கூறினார்.
 வூஹான் நகரில்...: ஷீ ஜின்பிங் கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியா வந்தபோது, குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் மோடியைச் சந்தித்துப் பேசினார். தற்போது சீன செல்லும் மோடியை, அந்நாட்டின் புரட்சிகர தலைவர் மா சேதுங்குக்கு மிகவும் பிடித்தமான வூஹான் நகரில் ஷீ ஜின்பிங் சந்திக்கிறார்.
 அங்கு தங்கும் இரு நாள்களில், அங்குள்ள ஈஸ்ட் லேக் ஏரி, யாங்க்ட்ஸி ஆறு, அருகில் உள்ள தோட்டம் ஆகிய இடங்களுக்கு இரு தலைவர்களும் செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.
 சிக்கிம் எல்லையில் உள்ள டோக்கா லாம் அருகே, சீன ராணுவம் கடந்த ஆண்டு சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய ராணுவம் அங்கு முகாமிட்டது. இதனால், 72 நாள்கள் போர்ப்பதற்றம் நீடித்தது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு பாதிக்கப்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தும் விதமாகவும், நம்பகத்தன்மையை மீட்டெடுக்கும் விதமாகவும் இரு தலைவர்களின் சந்திப்பு நடைபெறுவதாகத் தெரிகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com