டெல்டா மாவட்டங்களில் கூடுதல் துணை மின்நிலையங்கள்: அமைச்சர் பி.தங்கமணி

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு தடையின்றி தொடர் மின்சாரம் கிடைத்திடும் வகையில் கூடுதல் துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும் என
டெல்டா மாவட்டங்களில் கூடுதல் துணை மின்நிலையங்கள்: அமைச்சர் பி.தங்கமணி

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு தடையின்றி தொடர் மின்சாரம் கிடைத்திடும் வகையில் கூடுதல் துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஆகியவற்றின் சார்பில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சர் பி. தங்கமணி பேசியது: தமிழகத்தை மிகை மின்மாநிலமாக மாற்றுவேன் என அறிவித்து அதன்படி மின்உற்பத்திக்காக பல்வேறு திட்டங்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினார். விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு தடையின்றி மின்சாரம் கிடைக்க தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் பல கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி, தமிழகம் முழுவதும் 132 துணை மின்நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார். ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க கூடுதல் துணை மின்நிலையங்கள் ஏற்படுத்தப்படும். அதிகக் காற்று, கோடை வெயில் கொளுத்தும் தருணங்களில் கூட தடையின்றி மின்சாரம் கிடைக்க இந்த துணை மின்நிலையங்கள் உபயோகமாக இருக்கும். மின்சாரம் தடை ஏற்பட்டாலும் சிறிதுநேரத்திலேயே நிவர்த்தி செய்து உடனடியாக மின்விநியோகம் சீரமைக்கப்படும்.
 தமிழகத்தில் மின்வெட்டு என்பதே இல்லை. மக்களுக்கு முழுமையாக மின்சாரம் வழங்கப்படுகிறது. மின்வாரிய அலுவலர்கள் பொதுமக்களுக்கு தேவையான மின் சேவைகளை உடனுக்குடன் செய்துதர வேண்டும் என்றார் அவர்.
 கூட்டத்தில், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, திருச்சி மக்களவை உறுப்பினர் ப. குமார், மின்வாரிய இயக்குநர்கள் ஹெலன், செந்தில்வேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com