புதிய இந்தியா திட்டத்துக்கு புதுமையான தொழில்நுட்பங்கள் உதவும்

பிரதமர் நரேந்திர மோடியின் புதிய இந்தியா திட்டத்தை நிறைவேற்ற, புதுமையான தொழில்நுட்பங்களும், மாதிரிகளும் உதவும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
புதிய இந்தியா திட்டத்துக்கு புதுமையான தொழில்நுட்பங்கள் உதவும்

பிரதமர் நரேந்திர மோடியின் புதிய இந்தியா திட்டத்தை நிறைவேற்ற, புதுமையான தொழில்நுட்பங்களும், மாதிரிகளும் உதவும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
 அடல் புத்தாக்க திட்டத்தின் (ஏஐஎம்) கீழ், அடல் புதிய இந்தியா சவால் திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நிதின் கட்கரி, "போக்குவரத்து துறையில் புதுமையை கொண்டு வரவும், துறைசார் உள்கட்டமைப்பு தொடர்பான ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்யவும் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தயாராக உள்ளது' என்றார்.
 5 அமைச்சகங்களுடனான ஒத்துழைப்புடன் நடத்தப்படும் அடல் புதிய இந்தியா திட்டத்தின் கீழ், அடல் புத்தாக்க திட்டத்துக்கான புத்தாக்க சிந்தனையாளர்கள் வரவேற்கப்படுவர். புதுமையான தொழில்நுட்ப அடிப்படையிலான போக்குவரத்து, கழிவு மேலாண்மை உள்ளிட்ட 17 பகுதிகளில் சந்தை தயாரிப்புகளை அவர்கள் வடிவமைக்க வேண்டும்.
 இந்தத் திட்டத்தின் கீழ் வெற்றி பெறும் தொழில்நுட்ப யோசனைகளுக்கு ரூ.1 கோடி வரையில் மானியமும், வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.
 இதுகுறித்து, நீதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் கூறுகையில், "இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் புத்தாக்க யோசனைகள் யாவும், சாலைப் போக்குவரத்து, ரயில்வே, வேளாண்மை, நீர் மற்றும் துப்புறவு துறை அமைச்சகங்களுடனான கண்டிப்பான கலந்தாலோசனைகளுக்குப் பிறகே தேர்வு செய்யப்படும்.
 பல்துறை அமைச்சகங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் அடல் புதிய இந்தியா சவால் திட்டமானது, இந்தியாவுக்கான பிரச்னைகளை தீர்க்க உதவும்' என்றார்.
 நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறுகையில், "அடல் புத்தாக்க திட்டமானது, முற்றிலும் தனித்துவமான மற்றும் புத்தாக்க மாதிரி அடிப்படையிலான அரசு அமைப்புக்கு உள்பட்டதாகும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com