மேற்கு வங்கத்தில் மே 14-இல் உள்ளாட்சித் தேர்தல்

மேற்கு வங்க மாநிலத்தில் மே 14-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும்

மேற்கு வங்க மாநிலத்தில் மே 14-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், பதிவான வாக்குகள் மே 17-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 முன்னதாக, அந்த மாநிலத்தில் மே 1, 3 மற்றும் 5-ஆம் தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய ஏப்ரல் 9-ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தங்களது கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய இயலாத சூழல் உருவாகியுள்ளதாகவும் பாஜக குற்றம்சாட்டியது.
 மேலும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து தேர்தல் நடவடிக்கைகள் பாதியுடன் கைவிடப்பட்டன. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவை ஒரே கட்டமாக மே 14-ஆம் தேதி நடத்தலாம் என மாநில அரசு ஆலோசனை வழங்கியதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில், மாநிலத் தேர்தல் ஆணையம் அதுதொடர்பான அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com