அரசாங்க வேலைக்காக அலைவதற்குப் பதிலாக இளைஞர்கள் பீடா கடை வைக்கலாம்: திரிபுரா முதல்வர் அட்வைஸ் 

இளைஞர்கள் அரசாங்க வேலைக்காக அரசியல்வாதிகள் பின்னால் அலைவதை விட, பீடா கடையை வையுங்கள் என திரிபுரா மாநில முதல்வர் விப்லப் குமார் தேவ் 'அட்வைஸ்' செய்துள்ளார்.
அரசாங்க வேலைக்காக அலைவதற்குப் பதிலாக இளைஞர்கள் பீடா கடை வைக்கலாம்: திரிபுரா முதல்வர் அட்வைஸ் 

திரிபுரா: இளைஞர்கள் அரசாங்க வேலைக்காக அரசியல்வாதிகள் பின்னால் அலைவதை விட, பீடா கடையை வையுங்கள் என திரிபுரா மாநில முதல்வர் விப்லப் குமார் தேவ் 'அட்வைஸ்' செய்துள்ளார்.

திரிபுரா மாநில முதல்வராக பாரதிய ஜனதாவைச் சேர்ந்த விப்லப் குமார் தேவ் பதவி வகித்து வருகிறார். இவர் திரிபுராவில் ஞாயிறன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் பேசியாதவது:

அரசாங்க வேலை பெற வேண்டும் என்று இங்கு இளைஞர்கள் அரசியல்வாதிகளுக்கு பின்னால் செல்லும் நிலைதான் காணப்படுகிறது, இது அவர்கள் நேரத்தை வீணாக்கும் செயலாகும். இளைஞர்கள் அரசியல்வாதிகளுக்கு பின்னால் அலையாமல் பீடா கடையை வைத்து இருந்தால் அவர்களுடைய வங்கி கணக்கில் இப்போது ரூ. 5 லட்சம் இருந்து இருக்கும்.

அதே நேரம் விவசாயம் செய்வது, கோழி அல்லது பன்றி வளர்ப்பு போன்ற தொழில்களை தொடங்குவது என்பதால் தங்களுடைய தகுதி இறங்கிவிடும் என்ற குறுகிய எண்ணமானது படித்த இளைஞர்கள் மத்தியில் காணப்படுகிறது.

நாட்டின் வாழ்வாதாரங்களையும், உணவுப் பாதுகாப்பையும் மேம்படுத்துவதில் இந்த பணிகளுக்கும் சமமான முக்கியத்துவம் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். முதல்வரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கேலியாக விமர்சிக்கப்படுகிறது.

முன்னதாகவே இவர் இவ்வாறு தொடர்ந்து நகைப்புக்குரிய வகையில் பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். மகாபாரதம் காலத்திலேயே, இன்டர்நெட் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று பேசி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பின்னர் ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத்தார்கள் சரி, டயானா ஹெய்டனுக்கு ஏன் கொடுத்தார்கள் என்றும் கேள்வியை எழுப்பினார்.

அத்துடன் சமீபத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்கள் சிவில் சர்வீஸ் பணியில் சேர வேண்டாம் என்றும் இவர் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com