சர்தார் படேல் சிலைக்கு ரூ.2,500 கோடி ஆனால் ஆந்திர தலைநகருக்கு ரூ.1,500 கோடி: சந்திரபாபு நாயுடு காட்டம்

சர்தார் படேல் சிலைக்கு அதிகம் செலவும் செய்யும் மத்திய அரசு ஆந்திர தலைநகரை வஞ்சிப்பது ஏன் என முதல்வர் சந்திரபாபு நாயுடு திங்கள்கிழமை கேள்வி எழுப்பினார்.
சர்தார் படேல் சிலைக்கு ரூ.2,500 கோடி ஆனால் ஆந்திர தலைநகருக்கு ரூ.1,500 கோடி: சந்திரபாபு நாயுடு காட்டம்

சர்தார் படேல் சிலைக்கு அதிகம் செலவும் செய்யும் மத்திய அரசு ஆந்திர தலைநகரை வஞ்சிப்பது ஏன் என முதல்வர் சந்திரபாபு நாயுடு திங்கள்கிழமை கேள்வி எழுப்பினார்.

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் திருப்பதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு மற்றும் அனைத்து தலைவர்கள், அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

ஆந்திர மாநில தேர்தல் பிரசாரத்தின் போது இங்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஸ்வர்ண ஆந்திரா (தங்கம் போன்ற ஆந்திர மாநிலம்) வேண்டுமா அல்லது ஸ்கேம்
ஆந்திரா (ஊழல் படிந்த ஆந்திர மாநிலம்) வேண்டுமா என்று மக்களிடைய கேள்வி எழுப்பினார். அதுமட்டுமல்லாமல் ஸ்வர்ண ஆந்திரம் வேண்டுமென்றால் தெலுங்கு தேசம், பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் தற்போது ஊழல் கரங்களுடன் கைகோர்த்துள்ளார். 

இந்த தருணத்தில் செய்த சத்தியத்தை நிறைவேற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்புவது தவறாகுமா? தில்லியை விட சிறப்பான தலைநகரை ஆந்திராவுக்கு உருவாக்கித் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆந்திர தலைநகர் அமராவதியை உருவாக்க ரூ.1,500 கோடி மட்டுமே நிதி வழங்கப்பட்டுள்ளது. அதுவே குஜராத்தில் நிறுவப்பட சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கியுள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com