பாஸ்போர்ட்டைத் தொலைத்த இந்திய மணமகனுக்கு உதவிய சுஷ்மா: குவியும் பாராட்டுகள்

தனது திருமணத்துக்காக இந்தியா வர வேண்டிய நிலையில் அமெரிக்காவில் பாஸ்போர்ட்டைத் தொலைத்த மணமகனுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவி செய்துள்ளார்.
பாஸ்போர்ட்டைத் தொலைத்த இந்திய மணமகனுக்கு உதவிய சுஷ்மா: குவியும் பாராட்டுகள்


தனது திருமணத்துக்காக இந்தியா வர வேண்டிய நிலையில் அமெரிக்காவில் பாஸ்போர்ட்டைத் தொலைத்த மணமகனுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவி செய்துள்ளார்.

தேவதா ரவி தேஜா என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் சுஷ்மா சுவராஜுக்கு விடுத்த கோரிக்கையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் நான் எனது பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டேன். ஆகஸ்ட் 13 - 15ல் இந்தியாவில் எனது திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்காக ஆகஸ்ட் 10ம் தேதி இந்தியா வர வேண்டிய நிலையில் உள்ளேன். தயவு செய்து எனக்கு தட்கல் முறையில் பாஸ்போர்ட் கிடைக்க நடவடிக்கை  எடுத்து நான் எனது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க உதவி புரிய வேண்டும். நீங்கள் மட்டுமே எனது ஒரே ஒரு நம்பிக்கை. தயவு செய்து எனது கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு உடனடியாக அமைச்சர் சுஷ்மா தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், தேவதா ரவி தேஜா, நீங்கள் மிகவும் இக்கட்டான நிலையில் உங்கள் பாஸ்போர்ட்டை தொலைத்துள்ளீர்கள். நிச்சயமாக உங்கள் திருமணத்துக்கு நீங்கள் இந்தியா வந்து சேரும் வகையில் உதவி செய்வோம் என்று தெரிவித்திருந்தார்.

சுஷ்மா, உடனடியாக சம்பந்தப்பட்ட தூதரகத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

இதற்கு ரவி தேஜா தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஷ்மாவின் கோரிக்கையைத் தொடர்ந்து வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், ரவி தேஜாவின் விவரங்களைக் கேட்டுள்ளது. இதற்கு அவரும் தனது முழு விவரங்களையும் அளித்து, பாஸ்போர்ட்டுக்காக காத்திருக்கிறார்.

டிவிட்டர் மூலமாக, இந்தியருக்கு உதவிய சுஷ்மாவின் பணியை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இதற்கு முன்பும் பல பிரச்னைகளில் சிக்கித் தவித்தவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக அமைச்சர் சுஷ்மாவை தொடர்பு கொண்டு பயன்பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒரு மத்திய அமைச்சரை மிக எளிதாகத் தொடர்பு கொள்ள முடிகிறது என்றால் அதில் சுஷ்மாவுக்குத்தான் முதலிடம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com