29-ஆவது ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டம்: 88 பொருட்கள் மீதான வரி குறைய வாய்ப்பு

29-ஆவது ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மீதான வரி சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
29-ஆவது ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டம்: 88 பொருட்கள் மீதான வரி குறைய வாய்ப்பு

29-ஆவது ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மீதான வரி சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் தரப்பில் அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்றுள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மீதான 29-ஆவது கூட்டம் புது தில்லியில் மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மீதான வரிச் சீர்திருத்தங்கள் மற்றும் 88 பொருட்களின் மீதான வரி குறைப்பு தொடர்பான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.  மேலும் இந்த கூட்டத்தில் பங்குச் சந்தை வரி மீதான 157 பரிந்துரைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்படுகிறது. 

இந்த கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மீதான வரிச்சுமையை மேலும் குறைப்பது தொடர்பாகவும், இவற்றின் வரி விதிப்பு முறைகளை மேலும் எளிமைப்படுத்தவும் ஆலோசிக்கப்படுகிறது. முன்னதாக, 28-ஆவது கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் தெரிவித்திருந்தது போல, இம்முறை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மீதான ஜிஎஸ்டி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. இதில், 1.5 கோடி அளவிலான வர்த்தகத்தில் ஈடுபடும் தொழில் அமைப்புகள் மீதான கலால் வரியை நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்ய பயன்படும் கணிணி மென்பொருளின்  கட்டணத்தை குறைப்பது. டிஜிட்டல் ரசீது முறையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்துவது. ஆந்திரம் உள்ளிட்ட மாநில அரசுகள் பரிந்துரைத்துள்ள டிராக்டர் மற்றும் அதன் உதிரி பாகங்கள், சினிமா டிக்கெட் மற்றும் பாத்திரங்கள் மீதான வரி குறைப்பு உள்ளிட்டவைகளின் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com