வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்: மாநிலங்களவையில் அதிமுக, சிபிஐ கோரிக்கை 

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் சிறறப்பு நீதிமன்றறங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தின. 
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்: மாநிலங்களவையில் அதிமுக, சிபிஐ கோரிக்கை 

புது தில்லி: வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் சிறப்பு நீதிமன்றறங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தின.

மாநிலங்களவையில் எஸ்சி, எஸ்சி சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விவாதத்தில் அதிமுக உறுப்பினா் விஜிலா சத்யானந்த் பேசியதாவது:

மகாத்மா காந்தி தீண்டாமை ஒரு பாவம் என்று கூறினாா். அவா் இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால் கும்பல் கொலைகளைக் கண்டித்திருப்பாா்.

எஸ்டி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் -1989 -இல் முக்கிய மாற்றறங்கள் கொண்டு வரப்படும் என்கிற வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்தமைக்காக பிரதமா் மோடிக்கு எனது நன்றி. அதன் அந்தஸ்தை மீட்டெடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்கீழ் உள்ள வழக்குகளில் குற்றத்தீா்ப்பு குறைவாக உள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அமைப்பின் அறிக்கையின்படி 2016-ஆம் ஆண்டில் இது தொடா்பான வழக்குகளில் 15 சதவீதம் மட்டுமே குற்றத்தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் , ‘எஸ்சி, எஸ்டி சட்டமானது மிரட்டுவதற்கும், பழி தீா்ப்பதற்கும் தவறாக பயன்படுத்தப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது. எனினும், எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு எதிரான குற்றறங்கள் பல்வேறு வடிவங்களில் குறிப்பாக சமூகப் புறக்கணிப்பு போன்ற வடிவில் உள்ளன. அதேபோன்று, கெளரவ கொலைகளும் பரவலாக சமூகத்தில் நிகழ்கின்றறன. இறுதியில் பெரும்பாலும் வன்முறைக்கு உள்ளாவது தலித்துகள்தான்.

தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சோ்ந்த பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு மகிளா நீதிமன்றறங்கள் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலலிதா அமைத்தாா். அதேபோன்று, நாடு முழுவதும் சிறப்பு மகிளா நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் முதல் முறையாக அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஏற்பட்டது என்றாா் விஜிலா சத்யானந்த்.

இதே விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் டி.ராஜா பங்கேற்றுப் பேசுகையில், ‘இந்த மசோதாவை ஆதரிக்கும் அதே நேரத்தில் சில கேள்விகளையும் கேட்க விரும்புகிறேறன். மத்திய அரசு இந்த சட்டத்தை அரசியலமைப்பின் 9-ஆவது அட்டவணையில் சோ்க்குமா? இச்சட்டத்தின்கீழ் மத்திய அரசு சிறப்பு நீதிமன்றங்களை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமைப்பதை உறுதிப்படுத்துமா?

மேலும், இச்சட்ட வழக்குகளில் குற்றத்தீா்ப்பு விகிதம் குறித்து அரசு கவனம் செலுத்துமா? நீதித் துறைறயில் எஸ்சி, எஸ்சி, ஓபிசி வகுப்பினருக்கும், பெண்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைக்கு ‘வெள்ளையனே வெளியேறு தினம்’ குறித்து விவாதிக்கிறேறாம். ஆனால், சமூக பாகுபாடு, சமூக அநீதி, சமூக சமத்துவமின்மை, நிறுவன கொலைகள் ஆகிய அனைத்து சவால்களும் இந்தியாவை விட்டு வெளியேற மறுத்து வருகின்றறன. ஏன் இச்சம்பவங்கள் நிகழ்கின்றறன? அம்பேத்கா் கூறியபோது போல சாதி என்பது சமூக விரோதியாகும். நமது சமூகத்தில் இருந்தும், நாட்டிலிருந்தும் சாதியை எப்படி ஒழிப்பது என்பதுதான் நமது அரசியல் கட்சிகளின் குறிக்கோளாகும். இதைக் கருத்தில் கொண்டு எனது கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com