ஏர் இந்தியா விமானப் பயணங்கள் பாதுகாப்பானவைதானா?: நிர்வாகத்தை கேள்வி கேட்கும் விமானிகள் 

ஏர் இந்தியா விமானப் பயணங்கள் பாதுகாப்பானவைதானா என்று நிர்வாகத்தை நோக்கி ஏர் இந்தியா விமானிகளின் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
ஏர் இந்தியா விமானப் பயணங்கள் பாதுகாப்பானவைதானா?: நிர்வாகத்தை கேள்வி கேட்கும் விமானிகள் 

புது தில்லி: ஏர் இந்தியா விமானப் பயணங்கள் பாதுகாப்பானவைதானா என்று நிர்வாகத்தை நோக்கி ஏர் இந்தியா விமானிகளின் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியாவில் விமான சேவை வழங்குவதில் ஏர் இந்தியா குழுமமானது முன்னிலை வகிக்கிறது. இந்த குழுமம் ஏர் இந்தியா, ஜெட் எர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று பிரிவுகளில் செயல்படுகிறது. கடந்த வருடம் இந்தியாவில் இருந்து வெளி நாடுகளுக்கு மற்றும் வெளி நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு நிகழ்ந்த விமானப் பயணங்களில் 30.5% ஏர் இந்தியா குழுமத்தின் மூலமே நடைபெற்றுள்ளது.

குறிப்பிட்டுச் சொல்வதென்றால் கடந்த வருடம் இவ்வகையில் பயணம் செய்த 5.9 கோடி பயணிகளில், 1.8 கோடி பேர் ஏர் இந்தியா விமானங்களில் பறந்துள்ளனர். உள்நாட்டு விமானப் போக்குவரத்தினைப் பொறுத்த வரை, ஒட்டு மொத்த பயணங்களில் 28% பயணங்கள் இந்த குழுமத்தின் மூலம் நிகழ்கிறது. ஆனால் சமீப காலமாக இந்த குழுமம் பொருளாதார சிக்கலில் உள்ளது.  விமானங்களை இயக்கும் விமானிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான ஊழியர்களுக்கு இன்னும் ஜூலை மாத ஊதியம் வழங்கப்படவில்லை. 

அதன் உச்சகட்டமாக ஏப்ரல் - ஜூன்  நிதிக் காலண்டுக்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளன. சில குறிப்பிட்ட விஷயங்களை முடிக்க இயலாததால் முடிவுகள்  வெளியிடவில்லை என்று அறிவிப்பு மட்டும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் புழக்கத்தில் இருக்கின்ற நமது விமாaனங்கள் பாதுகாப்பானவைதானா என்று நிர்வாகத்தை நோக்கி ஏர் இந்தியா விமானிகளின் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

ஏர் இந்தியா குழுமத்தில் உள்ள விமானங்களை இயக்கும் விமானிகள், 'இந்திய வணிக ரீதியிலான விமானிகளின் கூட்டமைப்பு' என்னும் அமைப்பின் சார்பில் ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளனர். அதில் அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகளாவன:

சர்வதேச அளவில் பல நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகைகள் உச்ச கட்டத்தை அடைந்து விட்டன.   பல்வேறு  காரணங்களுக்காக தரையிறக்கப்பட்டு இருக்கும் விமானங்களை  சரி செய்யவும் நிதி இல்லை.விமானங்களைப் பாதுகாப்பாக இயக்குவது தொடர்பாகவும்,பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் நங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்.

தொடர்ந்து ஐந்தாவது மாதமாக சம்பளம் குறித்த நேரத்தில் வராமல் இருப்பது மிகவும் கவலை தருகிறது. இதுகுறித்து முன்னரே நிர்வாகம் உறுதியளித்திருந்தாலும், சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை வருவதற்கு காலதாமதாமாகும் என்ற விபரத்தைக் கூட ஊழியர்களுக்குத் தெரிவிக்கவில்லை.     

நிதி குறித்து ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவுவது கண்டிப்பாக ஏமாற்றம், எதிர்பார்ப்பு மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தி விடும்.  இது கண்டிப்பாக விமான செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஊழியர்களின் செயல் திறன் ஆகியவற்றைக் கடுமையாக பாதிக்கும். இது எந்த நிறுவனத்திற்கும் நல்லதல்ல.குறிப்பாக விமான நிறுவனத்திற்கு.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com