ராஜஸ்தானில் 3 கிராமங்களுக்கு ஹிந்து' பெயர்

ராஜஸ்தான் மாநிலத்தில் 3 கிராமங்களுக்கு ஹிந்து பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கிராமங்கள் முன்பு இஸ்லாமிய பெயர்களை கொண்டதாக இருந்தன.


ராஜஸ்தான் மாநிலத்தில் 3 கிராமங்களுக்கு ஹிந்து பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கிராமங்கள் முன்பு இஸ்லாமிய பெயர்களை கொண்டதாக இருந்தன.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், இஸ்லாமியாபூர் என்ற கிராமத்தின் பெயர் பிச்சான்வா கருத் என்றும், மியோன் கா பாரா (முஸ்லிம்களின் இல்லம்) என்ற கிராமத்தின் பெயர் மகேஷ் நகர் என்றும், நர்பாரா என்ற கிராமத்தின் பெயர் நரபுரா என்றும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றவுள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த பெயர் மாற்ற நடவடிக்கை பெரும்பான்மை வாக்காளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசு அளித்துள்ள விளக்கத்தில், மியோன் கா பாரா (முஸ்லிம்களின் இல்லம்) கிராமத்தில் 2,000 பேர் வசிக்கின்றனர். ஆனால், அங்கு 4 முஸ்லிம் குடும்பங்களே வசித்து வருகின்றன. மேலும், இந்த கிராமங்கள் முஸ்லிம் பெயர்களை ஒட்டி அமைந்துள்ளதால், முஸ்லிம் ஆதிக்கம் உள்ள இடம் என்று தவறாகக் கருதி இளைஞர்களுக்கு பெண் கொடுக்க மறுத்து வருகிறார்கள். இது தொடர்பாக பல புகார்கள் வந்தன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான அரசு மக்களை முக்கியப் பிரச்னைகளில் இருந்து திசை திருப்புவதற்காக இதுபோன்ற மதப் பிரச்னைகளை கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com