என்ஆர்சி விவகாரத்தில் ராகுல் காந்தி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்: அமித்ஷா

என்ஆர்சி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

என்ஆர்சி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது நிலைபாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். 

அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் வரைவுப் பதிவேடு(என்ஆர்சி) கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டது. இதில், 40 லட்சம் பெயர்கள் விடுபட்டது. இதற்கு மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். 

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இதுதொடர்பாக மேற்கு வங்க கூட்டத்தில் பேசியதாவது, 

"உங்களுடைய(மம்தா பானர்ஜி) எதிர்ப்பால் என்ஆர்சி நிறுத்தப்படாது. உங்களுக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால் சட்ட முறைப்படி, அஸ்ஸாமில் ஊடுருவியவர்கள் ஒவ்வொருவரையும் கண்டுபிடிக்க என்ஆர்சியை செய்து முடிப்பது எங்களது கடமையாகும். 

என்ஆர்சி பணிகள் அஸ்ஸாம் உடன்படிக்கைபடி நடக்கிறது. அஸ்ஸாம் உடன்படிக்கையை கொண்டு வந்தது யார்? 1985-இல் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தான் கொண்டு வந்தார். காங்கிரஸ் கட்சிக்கு அப்போது பிரச்னை இல்லை. ஆனால், வாக்கு வங்கிக்காக தற்போது அது பிரச்னையாக உள்ளது. இதில், ராகுல் காந்தி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com