தண்ணீர் கேன்களின் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும்'

நாடு முழுவதும் தண்ணீர் கேன்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என இந்திய தேசிய லோக் தள எம்.பி. துஷ்யந்த் செளதாலா மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


நாடு முழுவதும் தண்ணீர் கேன்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என இந்திய தேசிய லோக் தள எம்.பி. துஷ்யந்த் செளதாலா மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மக்களவையில் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை விவாதித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில், கேன்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீரின் விலை மிக அதிகமாக விற்கப்படுகிறது. சில பகுதிகளில் ஒரு தண்ணீர் கேன் ரூ.120-க்கு விற்கப்படுகிறது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நாடு முழுவதும் தண்ணீர் கேன்களின் விலையை ரூ.20-ஆக நிர்ணயித்து அரசு உத்தரவிட வேண்டும்' என்று செளதாலா வேண்டுகோள் விடுத்தார்.
1995-ஆம் ஆண்டுக்கான வருங்கால வைப்புநிதித் திட்டத்தில் சேர்ந்த பணியாளர்களின் கோரிக்கைகளான, ரூ.7500 வருங்கால வைப்புநிதியுடன் அகவிலைப்படி உயர்வு, பணியாளர்களின் மனைவிக்கும் சேர்த்து மருத்துவக் காப்பீட்டு வசதி ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும்' என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உறுப்பினர் ஜிதேந்தர் ரெட்டி கோரிக்கை விடுத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com