பாஜக ஆளும் மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரிப்பு: ராகுல்

பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து விட்டதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி புகார் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரிப்பு: ராகுல்

பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து விட்டதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரை சமூகவலைதளத்தில் அவர் சனிக்கிழமை வெளியிட்டிருக்கும் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தலித்துகள், ஆதிவாசிகளுக்கு எதிராக தாக்குதல்களை பாஜக தூண்டிவிட்டிருப்பதாக நான் குற்றச்சாட்டு தெரிவித்தபோது, அது உண்மைதானா என்று ஆய்வு செய்யும்படி, 56 அங்குல மார்பு கொண்டவர் (பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கிறார்) என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதை ஆய்வு செய்து, எனக்கு கிடைத்த தகவல்களை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். அது பிரதமரை விழித்தெழச் செய்யும் என்று நம்புகிறேன். அவ்வாறு பிரதமரை அந்தத் தகவல் விழித்தெழச் செய்யவில்லையெனில், அவரை காங்கிரஸ் விழித்தெழச் செய்யும் என்று அந்தப் பதிவுகளில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவுகளுடன் சேர்த்து, தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்த 2016ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணங்கள் பராமரிப்பு ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள புள்ளிவிவரத்தை மேற்கோள்காட்டி பத்திரிகையில் வெளியாகியிருந்த செய்தியையும் ராகுல் காந்தி பதிவேற்றம் செய்துள்ளார். 
அந்த செய்தியில், பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில்தான், எஸ்.சி. சமூக மக்களுக்கு எதிராக அதிக எண்ணிக்கையில் தாக்குதல்கள் நடந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, தம்மை 56 அங்குல மார்பு கொண்டவர் என்று கூறியிருந்தார் (துணிச்சலாக முடிவெடுக்கக் கூடிய நபர் என்ற அர்த்தத்தில் இவ்வாறு கூறியிருந்தார்). 
இந்த கருத்தை சுட்டிக்காட்டி, ராகுல் காந்தி தனது பேச்சின்போது பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை தலித் விரோத மனோபாவம் கொண்டவர் என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com