பாதுகாப்பு உபகரணங்களை வெளிநாடுகளிலும் விற்பனை செய்ய வேண்டும்: நிர்மலா சீதாராமன்

உள்நாட்டில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களை வெளிநாடுகளிலும் விற்பனைக்காக உற்பத்தி நிறுவனங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் யோசனை தெரிவித்தார்.
பாதுகாப்பு உபகரணங்களை வெளிநாடுகளிலும் விற்பனை செய்ய வேண்டும்: நிர்மலா சீதாராமன்

உள்நாட்டில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களை வெளிநாடுகளிலும் விற்பனைக்காக உற்பத்தி நிறுவனங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் யோசனை தெரிவித்தார்.
தமிழகத்தை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அலிகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதனை அவர் தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பங்கேற்றார். நிகழ்ச்சியில் நிர்மலா சீதா
ராமன் மேலும் பேசியதாவது:
உத்தரப் பிரதேசத்திலும் பாதுகாப்பு உற்பத்தி தளவாட மையம் அமைக்கப்படும். இங்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியில் ஈடுபடும். பாதுகாப்புப் படைகள் கோரும் உபகரணங்களை பிரதானமாகக் கொண்டு உற்பத்தியாளர்கள் செயல்பட வேண்டும். அதேநேரம், உள்நாட்டு சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்த பிறகு, வெளிநாடுகளுக்கும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். சர்வதேச அளவில் பாதுகாப்பு உபகரணங்களுக்கு மிகப் பெரிய சந்தை இருக்கிறது.
உள்நாட்டு பாதுகாப்பு துறையை ஊக்கப்படுத்துவதற்காக சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பு பாதுகாப்புப் படைகள் தங்களின் தேவையை தெரியப்படுத்தி வந்த நிலையில், தற்போது பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் பாதுகாப்புப் படைக்கு என்ன தேவை என்பதை தெரிவிக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com